தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கதறிஅழுத நடிகை அனுஷ்கா.. அரங்கையே அதிரவைத்த நெகிழ்ச்சி சம்பவம்

Report
987Shares

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் பொருத்தமான நடிகை என்ற இடத்தினை பெற்று நடிக்கும் நடிகைகள் இடத்தில் முக்கியமானவராக இருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தமிழ் மட்டும் இல்லாது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் முதல் ஐந்து இடத்தினை பெருபவர் அனுஷ்கா.

தெலுங்கு சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு இவர் நடித்த பாகுமதி, அருந்ததி தான் காரணம், சமீபத்தில் இவர் நடித்த பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் அனைத்து உலக மக்களையும் கவர்ந்தது.

சமீபத்தில் அனுஷ்கா இவரைதான் காதலிக்கிறார், திருமணம் செய்யப்போகிறார் என்று பல கிசுகிசுக்கள் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியாக இஞ்சி இடுப்பழகி படத்தின் இயக்குநரோடு திருமணம் செய்யப்போகிறார் என்று செய்தி பரவியது.

இந்நிலையில் சமீபகாலமாக பேட்டியிலும், நிகழ்ச்சிகளிலும் பேசால் இருந்தும் கலந்து கொள்ளாமலும் இருந்துள்ள அனுஷ்கா, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

தெலுங்கு தொகுப்பாளினி சுமா கனகலா நடத்தி வரும் கேஷ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல அனுபவங்களை கூறியுள்ளார். பிரபாஷ் உள்ள்ட்ட நடிகர்களை பற்றி பேசும் போது சிரித்து கொண்டிருந்தார் அனுஷ்கா.

இதன்பின் அருந்ததி படத்தினை பற்றி பேசும்போது அப்படத்தின் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணன் காருவை எண்ணியும், நீண்டநாட்கள் அவர் என்னுடன் இருந்துள்ளார் என்று கூறி தன்னையே அறியாமல் அழுத்ததுள்ளார். இயக்குநர் கோடி ராமகிருஷ்ணன் இறந்ததுதான் அதற்கு காரணம்.