இரண்டாம் திருமணம் செய்து கணவரோடு முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலா பால்.. அதிர்ச்சியில் சினிமாத்துறை..

Report
1520Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடிக்கும் அளவிற்கு பிரபல இயக்குநர் படமான மைனா படத்தின் மூலம் நல்ல இடத்தினை பெற்றவர் நடிகை அமலா பால். இதன்மூலம் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இளம் நடிகைகளுக்கு டப் கொடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் கமிட்டாகி நடித்திருந்தார்.

பிரபல இயக்குநரான ஏ.எல்.விஜய்யை காதலித்து மனமாற திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் குடும்பத்தினையும் சினிமா படங்களினையும் கவர்ந்து வந்த நடிகை அமலாபால் சில ஆண்டுகளுக்கு பின் கணவரோடு சில கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து பெற்றார்.

இதற்கு பல காரணம் சொல்லப்பட்டும் சர்ச்சையில் சிக்கிய அமலா பால் படவாய்ப்புகள் இல்லாமல் தனிமையில் இருந்துள்ளார். இதனால் நண்பர்களுடன் சேர்ந்து மதுவுக்கு அடிமையாகிவிட்டார் என்ற வதந்திகளும் பரவியது. இதை தூக்கிப்போட்டு ராட்சசன் என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

சமீபத்தில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் எடுத்தாலே பல சர்ச்சையான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகிய நிலையில் அமலா பால் நெருங்கி பழகிய நபரின் புகைப்படங்களும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவருடன் நெருக்கத்தில் இருந்த பவிந்தர் சிங்குடன் இரண்டாம் திருமணம் செய்திருக்கும் புகைப்படம் தற்போது சமுகவலைத்தளத்தை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. அவர்கள் திருமணம் செய்து எடுத்துக்கொண்ட மற்றும் அமலாபால் பவிர்ந்தருக்கு முத்தம் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து ஷாக்காகியுள்ளனர்.