நடிகை டாப்ஸியை அசிங்கப்படுத்தி ஒப்பிட்டு பேசிய தயாரிப்பாளர்.. பதிலடி கொடுத்த டிவிட்..

Report
77Shares

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் தான் டாப்ஸி பண்ணு. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் குடும்ப கதாபாத்திரங்களில் நடித்து டாப் இடத்திற்கு வந்தார்.

அதன்பின் தமிழில் அதிக படங்கள் நடிகைகளுக்கு சிறிய சீன்கள் மட்டும் இருப்பதை ஓப்பனாக பேசி பாலிவுட் பக்கத்திற்கு திரும்பினார். இந்தி படங்களில் அதிக வரவேற்பு பெற்று முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் படத்தில் நடித்து வருகிறார்.

பல படங்களில் நடித்து அதற்காக விருதுகளை பெற்று வருகிறார். சமீபத்தில் சிறந்த நடிகை என்ற டைட்டிலுக்கு #Filmfare விருது கொடுக்கப்பட்டது. இதற்கு பல பிரபலங்கள் வாழ்ந்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனை காமெடியாக டாப்ஸி நடித்த ஒரு படத்தின் தயாரிப்பாளர் தனுஜ் கார்க், ”பாலிவுட்டின் பெண் ஆயுஷ்மான் குர்ராணா” என்று கிண்டல் செய்துள்ளார். அதற்கு பதிலடி கொடுப்பதாக டாப்ஸி, “ஏன் என்னை பாலிவுட்டின் முதல் டாப்ஸி பண்ணு என்று அழைக்கக்கூடாதா? என்று கூறி மூக்குடைத்துள்ளார்.

இதற்கு ரசிகர்களும் தயாரிப்பாளர் தனுஜ்ஜை கலாய்த்து வருகிறார்கள்.

3284 total views