நடிகையிடம் அத்துமீறி தவறாக நடந்து கொண்ட நபர்... துரத்தி அடித்த பாதுகாவலர்..

Report
64Shares

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சைஃப் அலிகான். இவரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகள் தான் நடிகை சாரா அலிகான். இவர் கேதார்நாத், சிம்பா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது இளம் நடிகையாக வளர்ந்து வரும் நடிகையா இருக்கிறார்.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். இவர் தினம்தோறும் ஜிம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று அவர் உடற்பயிற்சி வகுப்பிலிருந்து வெளியே வரும்போது, அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். அப்பொழுது தீடீர்ரென்று ரசிகர் ஒருவர் சாரா அலிகானின் கையில் முத்தும் கொடுக்க முயன்றுள்ளார். உடனே அவர் சுதாரித்துக்கொண்டு கையை எடுத்துக்கொண்டார், அருகிலிருந்த பாதுகாவலர் அந்த நபரை துரத்தியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ...