யாருக்கும் காட்டாத புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.. இளைஞர் கொடுத்த ஷாக்..

Report
113Shares

தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கொடிகட்டி பறந்தவர் குஷ்பு சுந்தர். மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து புகழ் பெற்றவர். நடிகையை தவிர்த்து சில ஆண்டுகளுக்கு முன் அரசியலில் சேர்ந்து பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது 45 வயதாகும் குஷ்பு சினிமாத்துறையில் அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வெள்ளித்திரையில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். மேலும் இயக்குநர் சுந்தர் சி யை திருமணம் செய்து இரு பெண்பிள்ளைகளுக்கு தாயாக இருக்கிறார்.

இந்நிலையில் அவரது சிறு வயதில் தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒரு இளைஞர் ஒருவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நடிகை குஷ்பு இந்த புகைப்படம் என்னிடம் கூட இல்லை என்றும் இளைஞருக்கு நன்றி என்று கூறி பதிவிட்டிருந்தார்.