ஜோடியாக கோவிலுக்கு வந்த நயன்தாரா.. மூக்குத்தி அம்மனுக்காக விரதத்தை தொடங்கினாரா ?

Report
43Shares

எல்.கே.ஜி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக உருவெடுத்தவர் ஆர்.ஜே.பாலாஜி. நடிகராக மட்டுமல்ல தற்போது இயக்குனராகவும் களம் இறங்கவுள்ளார். ஆரம்ப காலத்தில் ரேடியோ ஜாக்கியாகவும், படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாகவும் அனைவரின் மனதில் இடம்பிடித்த ஆர்.ஜே. பாலாஜி. மூக்குத்தி அம்மன் எனும் படத்தை இயக்கவுள்ளார். நடிகை நயன்தாரா இதில் அம்மனாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரியில் சில வாரங்களுக்கு முன் தொடங்கியுள்ளது. நயன்தாரா இன்று படப்பிடிப்பில் இணைத்துள்ளார். நேற்று நயன்தாரா தன் காதலன் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விரதத்தை தொடக்கியுள்ளார்.

நயன்தாராவின் திடீர் வருகையால் ரசிகர்கள் அவரை காண குவிந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது. போலீஸின் உதவியுடன் நயன்தாரா பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.