சர்ச்சை நடிகர் மேல் எனக்கு க்ரஷ்.. ஓப்பனாக பேசிய ரஜினி பட நடிகை..

Report
125Shares

தமிழ் திரையுலகிற்கு 'திருடி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் தன்ஷிகா. பரதேசி மற்றும் பேராண்மை படத்தினால் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயர் கிடைத்தது.

ஆனால், சில படங்கள் மக்களிடம் சரியாக போய் சேராததால் தன்ஷிகாவிற்கு பெரிதளவில் படங்கள் அமையவில்லை. இதனால் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களிலும் நடிக்க துவங்கினார்.

மேலும், 2016ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த கபாலி படத்தில் ’யோகி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தன்ஷிகாவிற்கு மக்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும், கபாலி படத்திற்கு பிறகு தமிழில் சொல்லிக்கொள்வது போல் எந்த ஒரு படமும் அமையவில்லை.

இந்நிலையில் இணையதள ஊடகத்திற்கு தன்ஷிகா கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் எனக்கு நடிகர் சிம்பு மீது க்ரஷ் உள்ளது என்று ஓப்பனாக பேசியுள்ளார். ஏற்கனவே சிம்பு பல நடிகைகளுடன் சர்ச்சையில் உள்ளார். இதில் இது வேறயா? என்று இணையதளத்தில் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.