படவாய்ப்பு கொடுத்த இயக்குநரை சந்தேகப்பட்ட நடிகை.. ஓப்பன் டாக்..

Report
49Shares

டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமாகி பின் நடிகையாக மேகி படத்தின் மூலம் அறிமுக நடிகையாகும் வாய்ப்பை பெற்றவர் நடிகை நிம்மி. பேய் படமாக எடுக்கப்பட்ட இப்படத்திற்கு இயக்குநரும், தயாரிப்பாளருமான கார்த்திகேயன் என்னிடம் படத்திற்கு கமிட்டாக்க வந்தார்.

பல போலி இயக்குநர்கள் பற்றி அறிந்த நான் கார்த்திகேயன் சார் என்னை படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதை நம்பவில்லை. அவர் என்னை நடிக்க கூப்பிட்டதும் அதற்கு எனக்கு கால அவகாசம் வேண்டும் என்று கூறினேன். மிகவும் அவசரம் அடுத்த வாரம் படப்பிடிப்பு என்று என்று கூறியது சந்தேகத்துடனே ஓகே என்று கூறினேன்.

படபிடிப்பிற்கு வந்த நான் இயக்குநரிடம் என்ன உங்களுக்கு தெரியுமா? நான் நடித்ததும் படம் வெளியாகும் என்று குழப்பத்தில் சந்தேகத்துடன் கேட்டேன். எனக்கு நம்பிக்கை இல்லாமல் அவரிடம் இப்படி நடந்து கொண்டது எனக்கு தற்போது சங்கடமாக இருக்கிறது. என்னை பற்றி டப்ஸ்மாஷ் பார்த்து தான் என்னிடம் படத்தினை பற்றி பேச வந்துள்ளார் இயக்குநர் கார்த்திகேயன்.

இதை நான் நம்பாமல் இருப்பதால் படம் முடிந்தபின் படம் வெளியாகும் தேதியையும் கூறினார். இதனால் கார்த்திகேயன் சாருக்கு நன்றி கூற வேண்டும். சொன்னதை செய்பவர்கள் குறைவாக இருக்கும் சூழலில் இவர் நம்பிக்கைக்கு உரியவராய் இருக்கிறார் என்று கூறி ஓப்பனாக பேசியுள்ளார் நிம்மி.

2691 total views