காதல் தோல்வியால் 12 மாத்திரைகளை சாப்பிட்ட பிரபல நடிகை.. என்ன காரணம்..

Report
268Shares

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து பின் தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன்பின் நண்பன் படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார். படவாய்ப்புகள் குறைந்ததும் பாலிவுட் பக்கம் திரும்பிய இலியானா காதலில் விழுந்தார்.

ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த ஒருவரை காதலித்த இலியானா கடந்த வருடம் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். காதல் தோல்வியால மிகவும் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டார் இலியானா. இதனால் படங்களில் நடிக்க குறைத்துக்கொண்டு படபிடிப்பினை தள்ளி போட்டுள்ளார். இதனால் படவாய்ப்புகளும் கிடைக்காமல் போனது.

மன அழுத்தத்தில் தவித்த இலியானா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அந்த சமயத்தில் சுமார் 12 மாத்திரைகளை மன அழுத்தத்திற்காக உட்கொண்டு வந்ததால் உடல் எடை கூடியது. உடல் எடை பெருத்ததால் அதிலிண்டு தற்போது தான் மீண்டு வந்துள்ளார். இதை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.