அப்பாவிற்காக ஒதுங்கி முகத்தை பார்க்காமல் இருக்கும் கவின் - லாஸ்லியா.. இதுதான் காரணாமா?

Report
465Shares

பிக்பாஸ் 3 சீசன் முடிந்து சில மாதங்கள் ஆனநிலையில் தற்போது அதற்காக கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஒருசில போட்டியாளர்களை தவிர்த்து மற்ற அனைவரும் கலந்துகொண்டனர்.

ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்த்து இருக்கும் ஜோடி கவின் - லாஸ்லியா தான். மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை இந்த பிக்பாஸ் மூலம் பெற்றுள்ளார்கள் இருவரும். வீட்டினுள் காதலித்து வந்த இருவரும் வெளியில் வந்து திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்ப்பாத்தார்கள்.

ஆனால் இருவரும் எந்த நிகழ்ச்சிகளிலும் இணைந்து பேசியதும் இல்லை புகைப்படத்தினை எடுத்துகொண்டதும் இல்லை. இதற்கு காரணம் என்ன என்று ரசிகர்கள் கவலையடைந்து வந்த நிலையில் சில தகவல் கசிந்துள்ளது.

லாஸ்லியா - கவின் காதல் எப்படி என்று அவரது அப்பாவிற்கு நன்றாகவே தெரியும். வீட்டினுள் அவர் வந்தபோதே தெரிந்தது அவர் எப்படிபட்ட தந்தை என்று. அதை நிருபிக்க வேண்டும் என்பதற்காக இருவரும் காதலித்தது உண்மை என்றால் நான் சொல்வதை கேளுங்கள் என்றுள்ளார்.

இதைதொடர்ந்து இருவரும் வெளியில் நெருக்கமாக இருக்காமல் நடந்து கொள்ளுங்கள். அதற்கு பின் என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன் என்று கூறியுள்ளாராம். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் கவின் - லாஸ்லியா தள்ளி இருப்பது ஒரு வகையில் லாஸ்லியாவின் தந்தையால் கூட இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். என்ன நடக்கும் என்பது அவர்களின் காலபோக்குதான் பதிலளிக்கும்.