16 வயதில் நடந்ததைப் பற்றி ஓப்பனாக பேசிய நடிகை.. அவரே கூறிய சர்ச்சையான தகவல்..!

Report
112Shares

தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ராஷி கண்ணா. தமிழில் நடிப்பதற்கு முன்பாகவே, தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களான ஜூனியர் என்.டி.ஆர், ரவி தேஜா, நாகா அர்ஜுன் போன்றவர்களோடு இணைந்து நடித்து தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இதன்பின், தமிழில் இமைக்க நொடிகள், அடங்க மறு, அயோகியா போன்ற படங்களில் நடித்து தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். மேலும், அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிப்பை தவிர்த்து சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருப்பார் ராஷி கண்ணா. அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தன் ரசிகர்களுக்காக பதிவிடுவார்.

மேலும், இவரை பற்றி அண்மையில் கூட ராசி இல்லாத நடிகை என்று தயாரிப்பாளர்கள் இவரை ஓரம் தள்ளி விட்டார்கள் என்று சர்ச்சைக்குரிய செய்திகள் பரவலாக வந்தது.

இந்நிலையில், தனியார் பேட்டி ஒன்றில் செய்தியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு ஓப்பனாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது என்னவென்றால் ராஷி கண்ணா கூறியது, "நான் என் 16 வயதில் 16 வயது பையனுடன் டேட்டிங் செய்தேன்" என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்த தகவல் தற்போது இணையதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது...