அப்படிபட்ட காட்சிகளில் நடிக்க வைத்து என்னை ஏமாற்றினார் இயக்குநர்.. ஓப்பனாக பேசிய மந்த்ரா..

Report
212Shares

சினிமா வட்டாரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து முக்கிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மந்த்ரா. 90 களில் முக்கிய படங்களில் நடித்த இவர் சில காலமாக சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டியில் சர்ச்சையான கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் அவர், ‘இயக்குநர் தேஜா என்பவர் படத்தின் கதை சொல்வதாக கூறி சில வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தார். அப்படத்தில் கோபிசந்த் என்பவருடன் சேர்ந்து வரும் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு முன்பணம் பெற்றுக்கொண்டேன்.

அதன்பின் என்னுடைய கதாபாத்திரம் அவர் சொன்னதுபோல இல்லாமல் இருந்தது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் சிறிய விஷயமாக எடுத்து கொண்டு நடித்து முடித்தேன். ஆனால் என் வாழ்க்கையில் இதுபோல காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொள்வதாக இருந்தால் யோசித்துதான் முடிவெடுப்பேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் நான் நடித்து கொடுத்தது எனக்க இப்படி ஒரு பெயரை கொடுக்கும் என்று நினைத்ததே இல்லை. இதை நினைத்து பல நேரங்களில் வருத்தப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் நடிகை மந்தரா.