லஞ்சம் ஒழிப்பு துறை அதிகாரியாக மாறிய பிக்பாஸ் நடிகை.. புகைப்படத்தை வெளியிட்டு சிக்கிய தகவல்

Report
92Shares

பிக்பாஸ் சீசன் 3 மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் நடிகை மீரா மிதுன். பல சர்ச்சையில் சிக்கி தனது பெயரை தானே கேடுத்துக்கொண்டவர் இவர் தான். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தன் வாயை வைத்து கொண்டு சும்மா இல்லை என்று பார்த்தால், வெளியே வந்தும் அதேப்போல் இருக்கிறார்.

இவர், அண்மையில் கூட காவல் துறையை அதிகாரிகளை தவறாக பேசி ஹோட்டல் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்து போலீசாரிடம் வசமாக மாட்டிக்கொண்டார் மீரா. ஆனாலும், எந்த ஒரு பயமும் இல்லாமல் நான் எதுவும் பண்ணவில்லை என்று வெளியே சுற்றி வருகிறார் மீரா மிதுன்.

இந்நிலையில், மீரா அவரின் டிவிட்டர் பக்கத்தில், தான் லஞ்சம் ஒழிப்பு துறை அதிகாரியாக பதவி ஏற்க போகிறோன் என்று லஞ்சம் ஒழிப்பு துறையின் ஐ.டி கார்டை பதிவிட்டுள்ளார் மீரா. ஆனால், இந்த புகைப்படத்தில் உள்ள லஞ்சம் ஒழிப்பு துறையின் 'லோகோ' தவறானது என்று ரசிகர்களிடம் வசமாக சிக்கியுள்ளார். இதன்பின், ஏன் இப்படி கேவலமான விஷயத்தை பண்றீங்க என்று இணையதளத்தில் நெட்டிசன்கள் மீராவை வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

தற்போது இந்த புகைப்படம் இணையதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது..