சாண்டி என்னை பிரிவதற்கு நான் தான் காரணம்.. விவாகரத்து பற்றி ஓப்பனாக பேசிய முதல் மனைவி..

Report
824Shares

தமிழ் சினிமாவில் கலா மாஸ்டரினுடன் உதவி நடன கலைஞராக இருந்து பின் முன்னேறி டான்ஸ் மாஸ்டர் என்ற அங்கீகாரத்தை பெற்றவர் சாண்டி. சில பிரச்சனைகளால் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை பெற்று மக்கள் மனதில் பெரிய மதிப்பை பெற்றுள்ளார்.

இவரது இரண்டாம் மனைவியுடனும் குழுந்தை லாலாவுடனும் அந்த மகிழ்ச்சியை சக போட்டியாளர்களுடம் கொண்டாடி வருகிறார் சாண்டி. சமீபத்தில் அவர் வீட்டில் பிக்பாஸ் 3 சீசன் நண்பர்களுக்கு விருந்தையும் வைத்திருந்தார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்ட காஜல் பசுபதியுடன் காதலித்து வீட்டிற்கு பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டார். சாண்டியின் முதல் மனைவியாக இருந்த காஜல் சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். அதன்பின் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். நாங்கள் பிரிவதற்கு காரணம் நான் செய்த தவறுதான் என்று கூறி அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளார். ஆனால் அது என்னவென்று கூறவில்லை.

அதன்பின் இருவரும் அவரவர் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். காஜல் சமுகவலைத்தளங்களில் அதிக ஈடுபாடு கொண்டு சமுக கருத்துக்களை கூறி வருவார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டிக்கும் ஆதரவாகவும் பேசி வந்தார்.

சிலதினங்களுக்கும் காஜல் அவரது டிவிட்ட பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டார். அதில், கணவர், குழந்தைகள் இருக்கிறவர்களுக்கு வகைவகையாக நிகழ்ச்சிகள் இருக்கிறது. ஆனால் என்னை போன்று விவாகரத்து பெற்றவர்களுக்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தலாமே என்று கூறியுள்ளார்.