திருமணத்திற்கு பிறகும் இப்படி தான் இருப்பேன்.. விடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்த நடிகை..

Report
263Shares

'எனக்கு 20 உனக்கு18' என்ற படத்தின் முலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை 'ஸ்ரேயா சரண்'. ரஜினி நடித்த 'சிவாஜி' படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபல நாயகியாக மாறினார். இதன்பின், அழகிய தமிழ் மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, ரௌத்திரம் ஆகிய பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வந்தது.

மேலும், தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழி படங்களில் பிரபல கதாநாயகியாக நடித்து வளம் வந்தார் ஸ்ரேயா. இதன்பின், இவர் ரஷ்யாவை சேர்ந்த 'ஆண்ட்ரி கோஷெ' என்பவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதற்கு பிறகு நடிப்பதை குறைத்து கொண்டு சில படங்களில் மட்டுமே அவ்வப்போது நடித்து வருகிறார் ஸ்ரேயா.

நடிப்பதில் பெரிய கவனம் இல்லை என்றாலும் ஸ்ரேயா தனது இணையதள பக்கமான இண்ஸ்டாகிராமில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தையோ, கவர்ச்சியான புகைப்படத்தையோ மற்றும் கவர்ச்சியான விடியோக்களையோ அப்டேட் செய்துகொண்டு தனது ரசிகர்களிடம் இணைந்தே இருப்பார்.

அந்த வகையில் தற்போது ஷ்ரேயா, தான் நீச்சல் குளத்தில் குளிக்கும் விடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த விடியோவை பார்த்த சில ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து திருமணத்திற்கு பிறகும் இப்படியா என்று ஸ்ரேயாவை கேள்வி கேட்டு வருகிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் இந்த விடியோயோவை இணையதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.