திருமணத்திற்காக மீண்டும் மதம் மாறிய பிரபல நடிகை.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..

Report
280Shares

தமிழ் திரையுலகின் நடிகைகளில் லேடி சூப்பர் ஸ்டாராக நம்பர் 1 இடத்தில் இருந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவிற்கு 'அய்யா' படத்தின் மூலம் அறிமுகமாகி, சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நயன்.

பிறகு இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. இதனால் இவருக்கு என்றே தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் நயன்தாரா.

மேலும், கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் 'கிருத்துவ' மதத்தை சேர்ந்தவர். இந்நிலையில் நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவாவுடன் காதலில் இருந்து பல சர்ச்சையான விமர்சனங்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அதற்கு முற்றிபுள்ளி வைத்து இருவருக்கும் இடையே இருக்கும் உறவு நட்பானதுதான் என்று கூறி உறுதிபடுத்தினர்.

இதன்பின், தற்போது இயக்குனர் மற்றும் பாடல் ஆசிரியருமான விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். மேலும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று செய்திகள் கூறப்படுகிறது.

அந்த வகையில் இவர்கள் திருமணத்திற்காக நயன்தாரா மறுபடியும் 'இந்து' மதத்திற்கே மாறப்போகிறார் என்று செய்திகள் கசிந்து வருகின்றன.

10209 total views