விஜய்யை வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர்.. ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்திய வீடியோ..

Report
90Shares

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளியில் வருகிறது என்றால் அதன் வெற்றி மக்களின் பார்வையிலும், எத்தனை நாள் திரையரங்கில் ஒளிப்பரப்பாகிறது இன்னும் சிலவற்றை கொண்டுதான் அதன் பாக்ஸ் ஆபிஸும் அமையும். ஆனால் தற்போது வரும் படங்களில் சில நாட்களிலேயே படத்தின் விமர்சனங்களை வைத்தே படம் ஓடுமா ஓடாதா என்று கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான விஜயின் பிகில் படம் 200 கோடியை தாண்டி விட்டது என கூறி வரும் நிலையில் பிகில் படம் வசூலில் ஏமாற்றம் தான் என்று பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் கூறியுள்ளார். விஜய் படங்களை சமீபகாலமாக இவர் விமர்சித்தே வருகிறார்.

சில நாட்களுக்கு முன் அவரிடன் எடுக்கப்பட்ட பேட்டியில் மிகப்பெரிய கலெக்‌ஷன் சொல்வது யார்?. தயாரிப்பாளர் எப்படி கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பது அவருக்குதான் தெரியும். பட்ஜெட் படமாக இயக்குநர் பல செலவில் எடுத்துள்ளார். ஆனால் பிகில் படத்தினை திரையரங்கில் எடுத்துவிட்டு கைதி படத்தினை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டு தமிழ் மக்கள் பார்க்கும் அளவிற்கு பேட்டையை விட விசுவாசமும், நேர்கொண்ட பார்வையும் தான் வெற்றி பெற்றது என கூறி பிகில் படத்தை வெளுத்து வாங்கி பேசியுள்ளார்.

3920 total views