ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்.. விரைவில் திருமணம்..

Report
394Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே இந்தியா முழுவதும் ஒரு ஈர்ப்பை பெற்றிருக்கும். அந்த வகையில் இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழில் சமீபத்தில் தான் முடிவடைந்து முகென் வெற்றி பெற்றார்.

அனைத்து தரப்பினரும் விரும்பி பார்க்கும் இந்நிகழ்ச்சியில் காதல் கதைக்கு அளவே இருக்காது. ஆனால் காதல் செய்தவர்கள் வீட்டிற்கு வெளியே வந்ததும் அதை மறந்து அவரவர் வேலைகளை செய்ய துவங்கிவிடுகிறார்கள்.

இந்நிலையில் கன்னட மொழியில் நடைபெற்ற பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்ட சந்தன், நிவேதித்தா என்ற போட்டியாளர்கள் வீட்டினுள் காதலித்து வந்துள்ளனர். அதன்பிறகு நிகழ்ச்சி முடிந்த சில நாட்களிலேயே மைசூரில் நிச்சயதார்த்தமும் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இப்படி அனைவரும் காதலித்து திருமணம் செய்தால் நல்லாதான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.