96 படத்தில் திரிஷாவிற்கு பதில் இவர்தான்?.. உண்மையை கூறிய 41 வயதான நடிகை..

Report
116Shares

சென்ற வருடம் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்து பிளாக் பாஸ்டர் ஹிட்டான படத்தை தந்தது 96 படம். ராம் மற்றும் ஜானு என்ற கதாபாத்திரத்தை நம் யாராலும் மறக்கவே முடியாது. அதிலும் குறிப்பாக ஜானு கதாபாத்திரத்தை திரிஷா அழகாக நடித்திருப்பார்.

திரிஷாவின் சினிமா வாழக்கையில் இந்த படம் அவருக்கு பெரிய பெயரை தேடிதந்தது. திரிஷாவின் ஜானு என்ற கதாபாத்திரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் இந்த கதாபாத்திரம் திரஷாவிற்கு முன்பு ஒரு மலையாள நடிகையை தான் டைரக்டர் ராம் முடிவு செய்திருந்தாராம்.

அது யார் என்றால் அசுரன் படத்தில் நடித்து நம்மை பேச்சியம்மாள் என்ற கதாபாத்திரத்தின் மூலம் கவர்ந்த மஞ்சு வாரியார் தான். மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து பல விருதுகளை அள்ளியவர் மஞ்சு, திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து விலகினார்.

அதன்பின் பல ஆண்டுகள் கழித்து 2014ல் மீண்டும் நடிக்க ஆரம்பித்து பல படங்களில் கொடிகட்டி பறந்து வருகிறார். இந்நிலையில் 96 படத்தில் இயக்குநர் ராம் இவரை தான் முதலில் ஜானு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார்களாம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தை விட்டு விலகிவிட்டார்.

ஆனால் இப்போது நான் அந்த பட வாய்ப்பை விட்டது தவறு என்று எண்ணி கவலைப்பட்டு வருகிறாராம் நடிகை மஞ்சு வாரியார்...