சேரனிடம் எல்லை மீறிய கவின் ரசிகர்கள்.. இனி லாஸ்லியா பெயரை கூட சொல்ல மாட்டேன்...

Report
382Shares

பிக்பாஸில் லாஸ்லியவை காதலித்து பெரும் சர்ச்சையில் சிக்கியவர் தான் கவின். இந்த விஷயமாக இயக்குனர் சேரன் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் எத்தனையோ முறை எடுத்து சொல்லியும் அதை கவினும் லாஸ்லியாவும் கேட்கவில்லை. இதன் பிறகு லாஸ்லியாவின் தந்தை வீட்டிற்குள் வந்த பொழுது அவர் இதையெல்லாம் தூக்கி போட்டுவிட்டு என் மகளாக வா என்று தானே சொன்னார்.

ஆனால் லாஸ்லியா தனது தந்தையின் பேச்சையும் கேட்காமல் கவினுடன் சுற்றி கொண்டிருந்தார். இதன்பின் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு கவினும் லாஸ்லியாவும் எந்த ஒரு இடத்திலும் சந்தித்து கொள்ளவில்லை. ஆனால் இப்போது கவினுடைய ரசிகர்கள் ட்விட்டரில் இயக்குனர் சேரனை பற்றி தவறாக பேசி வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் சேரன் ஒரு பொது நிகழ்ச்சிக்கு பேட்டி கொடுத்தபோது கவினை பற்றி கூறியுள்ளது தானாம்.

அது என்னவென்றால் கவினிடம் சேரன் அவர்களுடைய காதல் விவகாரத்தை பற்றி எத்தனை முறை கூறினாலும் கவின் அதனை உதறி விட்டு சென்று விடுவாராம். இப்படியெல்லாம் பண்ணாதீங்க கவின் என்று கூட சொன்னாலும் கேட்கமாட்டாராம் கவின். இந்த பேட்டியை பார்த்த கவினின் ரசிகர்கள் ட்விட்டரில் சேரனை போட்டு வாட்டி எடுக்கிறார்கள்.

சில பேர் சேரனை கேலி செய்வது போல் மீம்ஸ் கிரேட் செய்து தவறான முறையில் சேரனை கிண்டல் செய்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் கொடுக்கும் வகையில் சேரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”கவின் லாஸ்லியா விஷயத்தில் இனி நான் குறுக்கிடமாட்டேன். எனக்கு அது அவசியம் கிடையாது. எந்த நேரத்திலும் என் நாவில் இருந்து அவர்கள் பெயர் வராது என்ற தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சேரன்.