பிரபல நடிகை ராதிகா சரத்குமாரின் திடீர் முடிவு.. சீரியலைவிட்டுவிட்டு டிவி தொகுப்பாளினியாக மாறிய சோகம்...

Report
547Shares

கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பாரதிராஜாவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் நடிகை ராதிகா. இதன் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து 80ஸ்,90ஸ்களில் உச்ச நட்சத்திர நாயகியாக வளம் வந்தார். தற்போது முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக தமிழ்,தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

இவர் வெள்ளி திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் கொடிகட்டி பறந்தவர். சித்தி, அண்ணாமலை, செல்லமே, தாமரை, வாணி ராணி, சந்திரகுமாரி போன்ற வெற்றி சீரியல்களை தயாரித்து நடித்தார். இதன் பின் சந்திரா குமாரி சீரியலில் கூட சில தவிரக்க முடியாத காரணங்களால் நடிப்பதில் இருந்து விலகினார்.

இந்நிலையில் இவர் அடுத்ததாக 'சித்தி 2' எடுக்க போவதாக சில வட்டாரங்கள் கூறி வந்தன. ஆனால் தற்போது ராதிகா ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுளார். அது என்னவென்றால் இவர் திடீர் என்று தனியார் டிவி சானலுக்கு தொகுப்பாளினியாக கமிட்டாகியுள்ளாராம்.

அந்த சானலில் வரும் ’கோடீஸ்வரி’ என்ற நிகழ்ச்சிக்கு தான் ராதிகா தொகுப்பாளினியாக காமிட்டாகியுளார். ஒரு கோடி தொகை பரிசு பொருளை கேள்விகளால் மிரட்ட அந்நிகழ்ச்சியை தேர்வு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

என்னடாஇது! எப்படி இருந்த ராதிகா இப்போது தொகுப்பாளினி ஆகும் அளவிற்கு வந்துவிட்டாரே என அவரது ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.