விவாகரத்து குறித்து முதல் முறையாக பேசிய டிடியின் கணவர்.. காரணம் இதுதான?

Report
193Shares

விஜய் டிவியில் தொகுப்பாளினி என்றாலே நம் எல்லோருக்கும் ஞாபகம் வருவது டிடி என்கிற திவ்யதர்ஷனி மட்டும் தான். இவர் முதன் முதலாக ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிவிட்டார். இதுமட்டுமில்லாமல் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்துமே பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vsகேல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், எங்கிட்ட மோததே போன்ற பல நிகழ்ச்சிகள் விஜய் தொலைக்காட்சியில் இவரால் தொகுத்து வழங்கப்பட்டு பெரிய ஹிட் கொடுத்துள்ளது. இதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் 'காபி வித் டிடி' என்ற நிகழ்ச்சி விஜய் டிவிக்கு மட்டும் பேர்வாங்கி தராமல் இவருக்கும் நல்ல தொகுப்பாளினி என்று பெயர் வாங்கித்தந்தது.

இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக விசில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் இதனை அடுத்து இவர் பெரிதாக எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் தற்போது இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. பா.பாண்டி, சர்வம் தாள மயம், துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் இவருக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இவரது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இருவரும் விவாகரத்து வாங்கிக்கொண்டனர். இதற்கான காரணம் என்னவென்று யாரிடமும் தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது டிடியின் கணவர் ஒரு பேட்டியில் விவகாரத்து பற்றி கூறியுள்ளார்.

நான் டிடியிடம் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கக்கூடாது, எந்த ஒரு படத்திலும் நடிக்கக்கூடாது என சொல்லிருந்தேன். ஆனால் அவள் எனது பேச்சை மதிக்கவில்லை. இதன்பின் அவளுக்கு ஆண் நண்பர்களும் அதிகமாகிக்கொண்டே இருந்தார்கள். இதையெல்லாம் நான் கண்டித்தும் அவள் கேட்பதாக தெரியவில்லை. அதனால் இருவரும் கொஞ்ச காலம் பிரிந்து வாழ்ந்தோம். அதன் பிறகு தான் நாங்கள் விவாகரத்து பெற்றுக்கொண்டோம் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக டிடியின் பதில் என்னவென்று கூறுவாரா என்று ரசிகரகளின் கேள்வியாக உள்ளது.

7606 total views