அம்மாவை சிறையிலிருந்து எடுத்தது உண்மையா? கவின் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி..

Report
504Shares

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து நம்மை கவர்த்தவர்தான் கவின். இவர் தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டது அனைவருக்கும் தெரியும். அதற்கு பிறகு பிக்பாஸ் கொடுத்த ருபாய் ஐந்து லட்சத்தை எடுத்து கொண்டு 90 நாட்கள் இருக்கும் நிலையில் விடை விட்டு வெளியேறியதும் அனைவரும் தெரிந்ததே.

இப்படி இருக்க கவின் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது அவரது தாயார் பண மோசடி வழக்கில் கைதாகி சிறைச்சாலைக்கு சென்றது மிகவும் பெரிய செய்தியானது. இப்படி இருக்க கவினிடம் இதை பற்றியெல்லாம் சொல்லாதீர்கள் என்றும் அவரது தாயார் கூறினாராம்.

இந்நிலையில் கவின் வெளியே வந்தவுடன் அவரது தாயார் உள்ளே இருக்கும் செய்தியை தெரிந்து கொண்டு அவரை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்படி அவரது தாயாரை வெளியே எடுக்க வேண்டும் என்றால் அவரகள் செய்த மோசடியில் இருந்து அனைத்து பணத்தையும் திரும்ப கட்டவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்படி இருக்க தன் தாயுடனும் பாட்டியுடனும் வீட்டில் இருந்து எடுத்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார். இதில் தெரியவருவது என்னவென்றால் கவின் பிக்பாஸில் கிடைத்த பணத்தை வைத்து தன் தாயை ஜெயிலில் இருந்து வெளியே எடுத்துள்ளார்.

View this post on Instagram

:)

A post shared by Kavin M (@kavin.0431) on

14889 total views