மதுபழக்கத்தை நிறுத்திய கமல்ஹாசன் மகள்.. ஓப்பனாக பேசி அசிங்கப்பட்ட நடிகை..

Report
69Shares

ஹிந்தி,தெலுங்கு,தமிழ் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறவர் தான் உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். மைக்கேல் கோர்சலே என்பருடன் காதல் கொண்டிருந்த ஸ்ருதி தற்போது ஒரு பொது நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினி லட்சுமி மன்சு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.

அப்போது காதல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுருதி நான் அவரிடம் காதல் கொண்டிருந்தது உண்மைதான். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாங்கள் இப்போது பிரிந்து விட்டோம் என்று கூறினார்.

அதன்பின் லட்சுமி மன்சு, நீங்கள் குடிப்பழக்கத்தில் இருந்தவர் என எனக்கு நன்றாகவே தெரியும் அதிலும் நீங்கள் விஸ்கி உங்களது பிரியமான ஒன்று. ஆனால் இப்போதெல்லாம் நீங்கள் குடிப்பதில்லை அது ஏன் எப்படி அந்த பழக்கத்தை விட்டிர்கள் என்று ஸ்ருதியிடம் கேட்டார்.

இதற்கு ஸ்ருதி 'ஆம் நான் குடி பழக்கத்தில் இருந்தேன் அதுவும் எனக்கு விஸ்கி என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் எனது உடல் நலத்திற்காக ஒரு பெரிய பிரேக் எடுத்துக்கொண்டு நிரந்தரமாக அதையெல்லாம் விட்டுவிட்டேன்' என்று கூறினார்.

இதற்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் வரவில்லையா? என்று ஸ்ருதியை லட்சுமி மன்சு கேட்டார். இதற்கு ஸ்ருதி "ஆம் எனக்கு சில பக்க விளைவுகள் வந்தது அதற்கு நான் மருத்துவர்களை சந்தித்தேன். இது என் தனிப்பட்ட விருப்பம் என்பதால் நான் யாரிடமும் இதைப்பற்றி கூறவில்லை. நல்ல விஷயங்களுக்காக இந்த மாதிரி எதிர்ப்புகளை நாம் சந்தித்து தான் ஆக வேண்டும்" என வெளிப்படையாக கூறினார்.

3105 total views