யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை.. தான் அனுபவித்த கஷ்டத்தால் வெளுக்கும் நடிகை..

Report
42Shares

இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் வளர்வதற்கு காரணம் அவர்களின் அயராத உழைப்பும், நடிப்பும் தான். அந்த வகையில் முன்னேறியவர்கள் இந்திய சினிமாவில் குறைவு தான். அதில் முன்னணியில் இருப்பவர் நடிகை வித்யாபாலன். சில்க்ஸ்மித்தாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் கவர்ச்சிக்காட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் வித்யாபாலன்.

தமிழில் இவரெல்லாம் நடிகையா என்று புறக்கணிக்கப்பட்டவர். அதன்பின் பாலிவுட்டில் மிகப்பெரிய இடத்தினை பிடித்தார். தமிழில் நடிக்க கூப்பிட்டும் நடிக்க மறுத்த வித்யாபாலன் அஜித், போனிகபூரால் மீண்டும் தமிழில் நடிக்க ஓப்புக்கொண்டார்.

இப்படத்திற்கு பின் பல விமர்சனங்களை சந்தித்த வித்யாபாலன் யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலைகிடையாது. விமர்சிப்பவர்களை நான் கண்டுகொள்வதில்லை. என் கேரக்டரை பிடிக்கவில்லை என்றால் அதை என்னால் எப்படி மாற்றிகொள்ள முடியும். என்னையும், நான் நடித்த படத்தையும் பிடிக்கவில்லை என்றால் அதை பார்க்காமல் போய்விடுங்கள் என்று சரமாறியாக கூறி பதிலளித்துள்ளார்.

1629 total views