தொலைக்காட்சியின் உண்மை முகத்தை கிழித்த மதுமிதா கணவர்.. என்ன நடந்தது?

Report
348Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் இறுதி விழா நிறைவுற்று அனைவரும் மற்ற வேலைகளை பார்த்து வருகிறார்கள். போட்டியாளர்கள் அனைவரும் பார்ட்டிகளிலும், ரசிகர்களை சந்தித்தும் வருகிறார்கள். இந்நிலையில் மதுமிதா ஏற்கனவே போட்டியாளர்களால் கொடுமைப்படுத்தப்பட்டாத கூறி தொலைக்காட்சியின் மேல் புகார் அளித்திருந்தார்.

இதன்பின் இறுதிவிழாவிற்கு எங்களை அழைக்கவில்லை என்ற செய்தியும் வந்தது. ஆனால் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் மதுமிதா கணவர் வந்தது போன்ற வீடியோ சமுகவலைத்தளத்தில் பரவி வந்தது. இதற்கு நான் போகல போகல.. இது எப்படி நடந்தது என்று கேள்விகள் கேட்டு வந்தார்.

இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை. நான் இருப்பது போன்று தொலைக்காட்சி மார்ஃபிங் செய்து இப்படி செய்துள்ளார்கள். எதற்கு இப்படி செய்ய வேண்டும் என்றும், இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.