10 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் பிகிலில் நடிக்க இதுதான் காரணமா?.. பழிவாங்கினாரா நயன்தாரா...

Report
1685Shares

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் முன்னணி நடிகையாகவும் கலக்கி வருபவர் நடிகை நயன்தாரா. இவர்’ அய்யா’ படத்தில் நடித்து ’சந்திரமுகி’ படத்தின் மூலம் நடிகையாக அந்தஷ்தை பெற்றார். அதன்பின் பிரபல இயக்குநர்கள் படத்தில் நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்றார்.

தற்போது விஜய்யின் ’பிகில்’ படத்தில் நடித்து முடித்து வெளியாகவுள்ளது. இந்நிலையில் நயன்தாரா 10 வருடங்களுக்கு முன் வில்லு படத்தில் நடித்த பிறகு தற்போது பிகில் படத்தில் நடித்துள்ளார். முன்னணி நடிகை நடிகராக இருக்கும் விஜய் - நயன்தாரா ஏன் இவ்வளவு வருடகாலம் ஒன்றாக நடிக்கைவில்லை என்று பல கேள்வியும் கேட்கப்பட்டு வந்தனர்.

இதற்கு காரணம் இயக்குநர் தரணி இயக்கிய குருவி படம் தான். குருவி படத்தில் முதலில் நடிகை நயன்தாரா ஒப்பந்தமானார். அதற்கான அட்வான்ஸ் தொகையை தயாரிப்பாளர் உதயநிதி கொடுத்துள்ளார்.

ஆனால் அப்போது நயன்தாரா அந்தகால கட்டத்தில் மிகப்பெரிய நடிகையாக இல்லாததால், அவரை நீக்கி அப்போது முன்னணி மற்றும் சீனியர் நடிகையாக இருந்த த்ரிஷாவை நடிக்க வைத்துள்ளார் விஜய். இயக்குநரும் இதற்கு சரியென்று சொல்லி நயன்தாராவை படத்தில் இருந்து நீக்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்தார் நயன்தாரா. தயாரிப்பாளர் உதயநிதி அட்வான்ஸ் தொகையை திரும்பப்பெறாமல் அடுத்த படத்திற்கு நயன்தாராவை புக் செய்துள்ளார். இதனால் உதயநிதி எப்போது அழைத்தாலும் மறுக்க மாட்டார் நயன் தாரா.

விஜய் மேல் இருக்கும் மனஸ்தாபம் தான் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. மேலும் தான் நடித்த படங்களுக்காக ப்ரோமோன் வேலைக்களுக்காகவும், சிறப்பு நிகழ்ச்சிகளிலில் மட்டும் நயன் தாரா கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.