பிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்?.. கசிந்தது உண்மை...

Report
460Shares

பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பல சண்டைகள் போட்டியாளர்களிடையே நடந்தது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த மதுமிதா கையை அறுத்துகொண்டு தற்கொலை முயற்சி செய்து கொண்டார். பிக்பாஸ் சட்டத்தை மீறியதால் மதுமிதா போட்டியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த மதுமிதா தனியார் இணைய தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். தனியார் ஆப் ஒன்றின் ப்ரோமோஷனுக்காக டாஸ்க் நடத்தப்பட்டது. அப்போது நான் "வருண பகவான் கூட கர்நாடககாரர் போல இருக்கு, நமக்கு மழையே தர மாட்டேங்கிறார்", என்று கூறினேன். ’கர்நாடகா தமிழகம் இடையே காவிர் நீர் பிரச்சனை பற்றி சர்ச்சையான கருத்தை கூறியதோடு, இதற்கு நடிகை ஷெரின் கடுமையாக ’நான் ஒரு கர்நாடக பெண் இருக்கும் நிலையில் நீங்கள் எப்படி இப்படியான கருத்தை கூறலாம்' என்று கேட்டார்.

அதற்கு நான் தனியார் ஆப் ஒரு சமுகவலைத்தளம் தானே, அதில் என் கருத்தை கூறியது தவறாக படவில்லை என்றேன். நீ ஏன் எப்பவும் தமிழ் பெண், தமிழ் கலாச்சாரம் என்று கூறிக்கொண்டு இருக்கிறாய். தமிழுக்காக உயிரை கொடுக்க முடியுமா? என்று கூறினார், என் வாதத்தை நிருபிக்க நான் கையை அறுத்து நிருபித்தேன் என்று கூறினார்.

எனக்கு வீட்டில் இருக்கும் சேரன், கஸ்தூரி தவிர அப்போது யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. நான் இனி பிக்பாஸ் பக்கமே திரும்ப மாட்டேன் என்று கூறினார்.

12465 total views