காதலுக்கு நோ சொன்ன கிரிக்கெட் வீரர் பும்ரா.. தொடர்ந்து ஃபாலோ செய்யும் நடிகை அனுபாமா

Report
354Shares

இந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய தூணாக இருந்து வருபவர் பும்ரா. ஐசிசி போலிங் தரவரிசையில் தொடர்ந்து முதலாம் இடத்தில் நிலைத்திருப்பவர். நடைபெற்று வரும் உலககோப்பையிலும் சிறப்பாகா அடியிருந்தார்.

இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன் பும்ராவிற்கும் பிரேமம் பட நாயகி அனுபாமாவிற்கும் காதலா? என கிசுகிசு ஏற்பட்டது. பும்ராவின் ட்விட்டர் பக்கத்தில் 25 நபர்களை மட்டும் ஃபாலோ செய்து வந்தார். அதில் 24 பேர் கிரிக்கெட் சம்பந்தபட்டவர்கள். அதில் 25-வது நபராக இருப்பவர் நடிகை அனுபாமா. அவரும் பும்ராவின் ட்விட்டர் கணக்கை ஃபாலோ செய்து வருவதால் இருவருக்கும் காதல் மலர்ந்தது என புரளி பேசப்பட்டது.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என எண்ணி பும்ரா அனுபாமாவை அன்ஃபாலோ செய்துவிட்டார். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லையாம். ஆனால் அனுபாமா ஃபாலோ செய்து வருகிறார்.

இருவரின் காதல் பற்றிய சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை அனுபாமா, பும்ரா என்னுடைய நெருங்கிய நண்பர் என கூறியிருந்தார். இப்படி இருக்க பும்ரா ஏன் அவரை அன்ஃபாலோ செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.