அஜித்துடன் தான் நடிக்க முடியாது என்று அசிங்கப்படுத்திய நடிகை, ஆனால், இப்போது? வாழ்க்கை வட்டம் தான்

Report
894Shares

தல அஜித் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு ஹிட் படங்கள் திரைக்கு வந்தது. அதை தொடர்ந்து அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தை வினோத் இயக்கி வருகின்றார், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வேகவேகமாக நடந்து வருகின்றது.

இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது, இந்நிலையில் வலிமை படத்தில் காலா ஹீரோயின் ஹுமா குரேஷி நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், இவர் ஏற்கனவே அஜித் நடிப்பில் உருவான பில்லா-2 படத்தில் கூட நடிக்கவிருந்து பின் நடிக்காமல் சென்றுவிட்டு, தற்போது வலிமை படத்திற்காக வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.