குருநாதா உங்களுக்கே இப்படி ஒரு நிலமையா! திருட்டுத்தனமாக பேட்ட ரிலீஸ் பண்ணீட்டாங்களே

Report
190Shares

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று பேட்ட படம் உலகம் முழுக்க வெளியானது. கடல் தாண்டியும் அவருக்கு பெருமளவிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. அவரின் படங்கள் என்றாலே எப்போதும் ஒரு தனி மகிழ்ச்சி தான் அனைவருக்கும்.

நேற்று காலை தியேட்டர்கள் கொண்டாட்டங்கள் மிக அதிக அளவில் இருந்தன. இப்படத்தில் வரும் மரணமாஸ் பாடலை போலவே ரசிகர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

படத்திற்கு நல்ல வரவேற்பும், விமர்சனங்களும் கிடைத்துள்ள நிலையில் இப்படத்தை வெளியான 12 மணிநேரத்திற்குள்ளாகவே இணையதளத்தில் சட்ட விரோதமாக வெளியிட்டுள்ளனர்.

பைரசியை ஒழிக்க சட்டம் பல இருந்தும் இப்படியான குற்ற செயல் படக்குழுவுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8462 total views