என்னது ரூ 5 கோடியா? அஜித் தரப்பு வருத்தத்துடன் விளக்கம்

Report
72Shares

அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஜித் ரூ 15 லட்சம் நிதியுதவி கொடுத்தது அனைவரும் அறிந்ததே.

ஆனால், சினிமா விநியோகஸ்தர் ஒருவர் அஜித் மீது கொண்ட அன்பினால், தல ரூ 5 கோடியை யாருக்கும் தெரியாமல் கொடுத்தார் என்றார்.

இதுக்குறித்து அஜித் தரப்பு கூறுகையில் ‘தயவு செய்து மக்கள் பாதிக்கப்பட்ட இந்த எமோஷ்னல் விஷயத்தில் தவறான தகவலை தரவேண்டாம்.

அஜித் அரசாங்கத்திடம் ரூ 15 லட்சம் கொடுத்துவிட்டார், அதை தொடர்ந்து இந்த ரூ 5 கோடி கொடுத்தார் என்பது உண்மையில்லை’ என்று அஜித் தரப்பே கூறியுள்ளது.

3977 total views