வாய்பிளக்க வைத்த வசூல்! டாஸ்மாக் வியாபாரம் அமோகம்! எந்த ஊரில் அதிகம் தெரியுமா?

Report
47Shares

தமிழகத்தில் தீபாவளியையொட்டி கடந்த 2 நாள்களில் மட்டும் 465 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

தீபாவளி தினமான நேற்றும், வெள்ளிக்கிழமையும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களைகட்டியது. இவ்விரு நாள்களிலும் 465 கோடியே 79 லட்சம் ரூபாய் அளவுக்கு மது விற்பனையாகியுள்ளதாக, டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 103 கோடியே 82 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. திருச்சி மண்டலத்தில் 95 கோடியே 47 லட்சம் ரூபாய்க்கும், சென்னையில் 94 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கும் மது வகைகள் விற்பனையாகியுள்ளன.

சேலம் மண்டலத்தில் 87 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 84 கோடியே 56 லட்சம் ரூபாய்க்கும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடந்துள்ளது.