90 வருஷம் கழிச்சு பிறந்த குழந்தை! கடைசியாக பிறந்த நபர் இறந்தார்! ஆச்சர்யான இடம்!

Report
102Shares

வீட்டில் குழந்தை இருந்தால் எப்போதும் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. சரிதானே. 90 வருஷம் கழித்து ஒரு ஊரில் குழந்தை பிறந்தால் அது நிகழ்ச்சி எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

ஆம்., அமெரிக்காவின் மைனே தீவில் இரு வாரங்களுக்கு முன்பு ஆரோன் கிரே மற்றும் எரின் பெர்னால்ட் கிரே தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளதாம்.

சுவாரசியம் என்னவெனில் இந்த தீவில் 90 வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை இது தானாம்.

அக்குழந்தையின் பெற்றோர் மைனே கடற்கரையிலிருந்து மிகப்பெரிய தீவான மவுண்ட் டெசர்ட்க்கு செல்ல திட்டமிட்டிருந்தார்களாம். அங்கேயே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆசையும் இருந்ததாம்.

நினைத்தபடியே கடந்த செப்டமர் 26 ல் அத்தீவில் குழந்தை பிறக்க அசேலியா பெல்லி கிரே என பெயர் வைத்துள்ளனராம்.

1927 ல் தான் அத்தீவில் கடைசியாக குழந்தை பிறந்ததாம். கடைசியாக பிறந்த நபர் கூட 2005 ல் இறந்துவிட்டார் என எரின் கூறியுள்ளார்.