தீபாவளி நேரத்தில் நேர்ந்த கொடூர சம்பவம்! கணவர் கண் முன்னே மனைவி பரிதாப மரணம்!

Report
150Shares

சென்னை பூந்தமல்லி குமணன் சாவடியை சேர்ந்தவர்கள் ராமதாஸ் (40) மற்றும் தேவி (35) தம்பதியினர். ராமதாஸ் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார்.

இருவரும் இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் மழை நீர் நிரம்பியிருப்பதை அறியாமல் ராமதாஸ் சென்றுள்ளார். இதனால் இருவரும் நிலை தடுமாறி கிழே விழுந்துள்ளனர்.

அப்போது வேகமாக வந்த கண்டெய்னர் லாரி இருவரின் மீது மோதியுள்ளது. இதில் தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ராமதாஸ் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதனால் பள்ளத்தை சீரமைக்க வேண்டும், இதுபோல மூன்று விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தீபாவளி நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நேர்ததால் பொதுமக்களும், குடும்பத்தினரும் சோகத்தில் உள்ளனர்.

7268 total views