தப்பி ஓடி தலைமறைவு? கல்கி சாமியார் எங்கிருக்கிறார் தெரியுமா? பல கோடி மோசடி - வீடியோ வெளியானது

Report
323Shares

அண்மையில் நாடு முழுக்க பரவலாக பேசப்பட்டு வரும் விசயம் கல்கி பகவான் சாமியார் பல கோடி வரி ஏய்பு செய்தி. தமிழ்நாடு, ஆந்திரா, வெளிநாடுகள் என பல இடங்களில் இவருக்கு ஆசிரமம் இருக்கிறது.

வருமான வரித்துறை சோதனையில் ரூ 500 கோடி பணத்தை அவர் கணக்கில் காட்டவில்லை என்றும், அவரது வாரிசுகள் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் சொல்லப்பட்டது.

அதே வேளையில் தன்னை மகா விஷ்ணுவின் அவதாரம் என கருதும் கல்கி பகவான் மற்றும் அவரது மனைவியை அம்மா பகவான் எனவும் கூறி வந்தார்.

பக்தர்களும் அவ்வாறே அழைத்து வந்தனர். இந்நிலையில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்களாம்.

ஆனால் கல்கி பகவான் மற்றும் அவரது மனைவி எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என ஆசிரமவாசிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கல்கி தலைமறைவாகிவிட்டார் என்ற செய்தி உலாவ தற்போது அவர் தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் அவர் நாங்கள் நாட்டை விட்டு எங்கேயும் தப்பி ஓடவில்லை, நேமம் கிராமத்தில் இருக்கிறோம். நான் நலமாக இருக்கிறேன், வழக்கம் போல பல்வேறு வகுப்புகளை எடுத்து வருகிறேன்.

இங்கே எந்த பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார்.