அடேய் நீங்க சாமியையும் விட்டு வைக்கலயா! அத்திரவரதருக்கு வந்த சோதனை - பறக்கும் மீம்ஸ்

Report
79Shares

அண்மையில் தமிழக முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது காஞ்சிபுரம் அத்திவரதர் தான். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருக்கும் அனந்த சரஸ் குளத்தில் நீரில் மூழ்கியிருக்கும் பெருமாளை வெளியே கொண்டு வந்து பொதுமக்கள் தரிசனத்திற்கு வைக்கும் வைபவம் நடைபெறுகிறது.

அத்தி மரத்தில் செய்யப்பட்ட இந்த சிலை நீரில் எத்தனை வருடங்கள் மூழ்கியிருந்தாலும் அதற்கு எதுவும் ஆகாது என்ற இயற்கையின் அதிசயமும், ஆன்மீக நம்பிக்கையும் இருந்து வருகிறது.

கடந்த 1979 க்கு பிறகு இந்த 2019 ல் வெளிவந்துள்ள அத்தி வரதர் 48 நாட்கள் பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளி முடித்துவிட்டார். தற்போது மீண்டும் அவரை நீருக்குள் கொண்டு சென்று வைக்கும் வழக்கம் நடைபெறவுள்ளது.

சமூகவலைதளங்களில் இப்போதெல்லாம் கேலி கூத்துக்கள் நிறைய இடம் பெறுகின்றன. அதிலும் மீம் கிரியேட்டர்கள் செல்லும் அட்டகாசம் ஒரே அமர்க்களம் தான். மீம் என்றதும் காமெடி நடிகர் வடிவேலுவை விட்டுக்கொடுக்க முடியாது.

அவரையும் அத்தி வரதரையும் இணைத்து மீம் உருவாக்கியுள்ளார்கள். சாமியை கேலி செய்வது போல இது தெரிந்தாலும் பலரையும் இந்த மீம் சிரிக்கவைத்துள்ளது என்பதே உண்மை.

3746 total views