பூமிக்கு ஆபத்து...! நெருங்கி வரும் மூன்று பெரிய விண்கற்கள் - மோதினால் அவ்வளவு தான்!

Report
285Shares

வானில் நாம் நினைத்துப் பார்க்க இயலாத அதிசயங்களும், அதிர்ச்சிகளும் நிறைந்திருக்கின்றன. அவற்றில் விண்கற்களும் ஒரு அங்கமாகும். இவை சூரியனையோ அல்லது வேறு சில கோள்களையோ சுற்றி வந்து கொண்டிருக்கும்.

ஆனால் கோள்களை விட அளவில் மிகச் சிறியவை. இருப்பினும் பூமிக்கும், மனித குலத்திற்கும் மிகவும் ஆபத்தானவை. சில சமயங்களில் பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக, உள்ளிழுக்கப்பட்டு பூமிக்குள் விழும் சூழல் ஏற்படுகிறது.

இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு. இந்நிலையில் “2019 OD", "2015 HM10", "2019 OE" ஆகிய விண்கற்கள் இன்று(ஜூலை 24, 2019) பூமிக்கு மிக அருகில் வரும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இருப்பினும் பூமிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் குறிப்பிட்ட தூரத்தில் அப்படியே கடந்து சென்றுவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

விண்கல் 2019 OD:

அப்போலோ வகையிலான இந்த விண்கல், பூமியில் இருந்து 219,375 மைல்கள் தொலைவில் அப்படியே கடந்து சென்றுவிடும் என்று கணித்துள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்பு, இதனைக் கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள், விரைவில் பூமியை கடந்து சென்றுவிடும் என்று தெரிவித்துள்ளனர். நிலவை விட பூமிக்கு மிக அருகில் செல்லும். இருந்தபோதிலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது.

விண்கல் 2015 HM10:

361 அடி அகலத்துடன் இன்று இரவு 7 மணியளவில் பூமியை கடந்து செல்லும் என்று கூறப்படுகிறது. இது மணிக்கு 21,240 மைல்கள் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பூமியை கடந்து செல்கையில் 3 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத விவகாரத்தில் வசமாக சிக்கிக் கொண்ட தமிழர்கள் - கெடு விதித்த மலேசிய அரசு!

விண்கல் 2019 OE:

இது மணிக்கு 20,160 மைல்கள் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. 171 மீட்டர் அகலத்தில் இன்று இரவு 8.05 மணிக்கு பூமியை கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 597,706 மைல்கள் அப்பால் பூமியை கடந்து சென்று விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.