சிறுமிக்கு 3 மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகம்! சிங்கம் சூர்யா போல குற்றவாளியை கைது செய்த பெண் போலிஸ்

Report
364Shares

போலிஸ் கெட்டப்புக்கு சினிமாவில் மறுவடிவம் கொடுத்த பெருமை நடிகர் சூர்யாவையே சேரும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் காக்க காக்க படத்தை தொடர்ந்து சிங்கம் படமும் அவருக்கு மிக முக்கியமானதாக அமைந்தது.

கேரளாவில் அவருக்கு ரசிகரகள் அதிகம். அந்த வகையில் கேரளாவின் கொல்லம் பெண் போலிஸ் கமிஷனர் மெரின் ஜோசப் சூர்யா ஸ்டைலில் வெளிநாடு சென்று தலைமறைவாக இருந்த பாலியல் குற்றவாளியை கைது செய்துள்ளதால் அம்மாநில ரசிகர்களாக கொண்டாடப்பட்டு வருகிறார்.

சவுதியில் வேலை செய்யும் சுனில் என்பவன் கடந்த 2017 ல் விடுமுறைக்காக வந்த போது தன் நண்பனின் உறவினரான 13 வயது பெண்ணை 3 மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

பெற்றோரிடம் இந்த விசயத்தை கூற அவர்கள் போலிஸில் நடவடிக்கை எடுக்க ஆக கடந்த இரண்டு வருடங்களாக அவர்களும் முடியாமல் விட்டு விட்டனர்.

இதற்கிடையில் அந்த நண்பரும், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணும் தற்கொலை செய்துகொண்டனர். இந்நிலையில் புதியதாக பொறுப்பேற்ற மெரின் கிடப்பில் கிடந்த வழக்குகளை எடுத்து ஆராய்ந்த போது கைக்கு சிக்கியது இந்த வழக்கு.

இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளி சுனில் தலைமறைவாக உள்ளதை அறிந்த மெரின் சவுதி போலிஸ் உதவியுடன் வெளிநாடு சென்று தலைமறைவாக இருந்த அந்த குற்றவாளியை கைது செய்துள்ளாராம்.

12219 total views