பிரபல சர்க்கஸ் பயிற்சியாளரை கடித்துக் கொன்று, சடலத்துடன் விளையாடிய புலிகள்..!

Report
23Shares

இத்தாலியில் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு தயாராகி கொண்டிருந்த உலகின் மிகப்பிரபலமான சர்க்கஸ் பயிற்சியாளரை அவருடைய புலிகளே கடித்து கொன்றன.

உலகளவில் மிகவும் பிரபலமான சர்க்கஸ் பயிற்சியாளர் எட்டோர் வெபர். அவருக்கு வயது 61.

கடந்த வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு இத்தாலியின் பாரிக்கு அருகிலுள்ள கிராமப்புறங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்துவதற்காக தயாராக இருந்தார்.

அதற்கு முன்னதாக, அவர் தன்னுடைய புலிகளுடன் ஒத்திகை நிகழ்ச்சி பார்த்துகொண்டிருந்தார். அப்போது ஒரு புலி திடீரென அவரை தாக்கியது.

அதனை பார்த்த மற்ற 3 புலிகளும், அவர் மீது தாக்குதல் நடத்தி அவரின் உயிரை பறித்தது.

இந்நிலையில், அங்கு வந்த மருத்துவர்கள் இறந்தவரின் சடலத்தை பார்த்து திகைத்து நின்றனர். சடலத்தை அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.

இறந்த அவரது சடலத்துடன் அந்த 4 புலிகளும் சுமார் அரை மணி நேரம் விளையாடிகொண்டிருந்ததாக கூறப்படுகிறது

இறந்த வெபரின் சக கலைஞர்களும் அந்த புலிகளை விரட்டும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புலிகளின் பயிற்சியாளர் இறந்துவிட்டதால் அந்த புலிகளை கட்டுப்படுத்துவதும் கேள்விக்குறியாக உள்ளது.

பொதுவாக இது மாதிரியான சம்பவம் நடப்பதால், காட்டு விலங்குகளை சர்க்கஸில் பயன்படுத்த 20 ஐரோப்பிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக உலகளவில் 40 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

1817 total views