டிக் டாக்கில் பிரபலமாக ஆசைப்பட்டு பரிதாபமாக உயிரைவிட்ட சம்பவம்! விபரீத வீடியோ இதோ

Report
112Shares

சமூக வலைதளம் என்னும் மாயையை சில நல்ல வழியில் பயன்படுத்திகொண்டாலும் சில அசம்பாவிதங்களும் நடைபெறுகிறது. இதில் ஒன்று டிக் டாக். அண்மைகாலமாக இதன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

சினிமா பட டையலாக்குகளுக்கு வாய் அசைப்பதும், பாடல்களுக்கு நடனமாடுவதும் இதில் பலரால் செய்யப்பட்டு வருகிறது. ஆபாசமான கொடுமைகளும் அரங்கேறுகிறது.

அதே வேளையில் இதில் உயிருக்கு மரணம் விளைவிக்கும் செயல்களிலும் சிலர் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் தன் திறமையாக காட்டுகிறேன் என கர்நாடகா துமகூரு பகுதியை சேர்ந்த குமார் என்ற இளைஞர் உயிரழந்துள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில் சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் கீழே விழுந்ததில் கழுத்து எலும்பில் பலமான அடிப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக செய்திவெளியாகியுள்ளது. அவரின் பெற்றோர் மகனின் செயலால் மிகவும் மனவேதனையுடன் இருக்கிறார்களாம்.

5069 total views