100 வீடியோக்களுடன் சிக்கிய கும்பல்... மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவமா?

Report
44Shares

தமிழகத்தை கடந்த சில மாதங்களாக புரட்டி போட்ட விஷயம் பொள்ளாச்சி சம்பவம் தான். இளம் பெண்களை ஏமாற்றி அவர்களை தனிமையான இடத்திற்கு கொண்டு வந்து அவர்களிடம் தவறாக நடந்து கொண்டு அதை வீடியோ எடுத்து அந்த பெண்களை மிரட்டி வந்துள்ளனர். இந்த விவகாரம் வெளியாகி தமிழகத்தில் பெரும் பூதாகரமாக வெடித்தது.

இந்நிலையில் அதே போல ஒரு சம்பவம் கள்ளக்குறிச்சியிலும் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி தங்கால் ரோட்டில் வசிக்கும் சாந்தி என்பவரது மகள் அப்பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த ராஜா, மற்றும் வேலுமணி ஆகியோர் சாந்தியின் மகளை அவ்வப்போது சந்தித்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். இதை பொறுக்க முடியாத அந்த பெண் தன் அம்மா சாந்தியிடம் இது குறித்து கூறியுள்ளார்.

சாந்தி இது குறித்து போலீசில் சொல்லும் போது அவர்கள் ராஜாவையும் வேலுமணியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பெரும் அதிர்ச்சியான தகவல் வெளியாகியது. ராஜா, வேலுமணி ஆகியோருடன் மேலும் இருவர் இணைந்து ஒரு கூட்டாக சுற்றியுள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் கல்லூரி காதல் ஜோடிகள், கள்ளக்காதல் ஜோடிகள் சந்திப்பது வழக்கமாம். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த நான்கு பேரும் இந்த ஜோடிகள் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்தும், சில நேரம் அந்த ஜோடியுடன் வரும் ஆண்களை துரத்திவிட்டு பெண்களை பலாத்காரமும் செய்து வந்துள்ளனர். மேலும் அதையும் வீடியோ எடுத்து மேலும் அந்த பெண்களுக்கு தவறாக தொல்லைகள் கொடுத்து வந்துள்ளனர்.

இவர்களிடம் இதே போல 100 பலாத்காரம் மற்றும் காதல் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகள் தனிமையில் இருந்ததை அவர்களுக்கு தெரியாமல் ரசிகயமாக எடுத்த வீடியோக்கள் இருந்துள்ளது. பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

இந்த 4 பேரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை இவர்கள் வீடியோவை இன்டர்நெட்டில் விட்டுவிடுவோம் என மிரட்டி வைத்திருந்ததால் இந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. தற்போது சாந்தியின் மகள் அளித்த புகாரால் இந்த சம்பவம் வெளியாகியுள்ளது.

1904 total views