கோவிலில் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபத்து! அதிர்ச்சியாக்கிய வீடியோ

Report
273Shares

மனக்கவலைகள், பிரச்சனைகள் நீங்க வேண்டி கோவிலுக்கு செல்வது வழக்கம். ஆனால் சில நேரங்களில் எதிர்பாராத அசம்பாவிதங்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளி என்ற பகுதியில் இருக்கும் கோவில் ஒன்றில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அவரின் புடவையில் எதிர்பாரத விதமாக தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை கவனித்த அப்பெண் உடனே தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால் காற்று வேகமாக அடித்ததால் தீ மளமளவென பற்றி புடவை முழுக்க பரவியது. இதனால் அதிர்ச்சியான அப்பெண் கத்தி கூச்சல் போட்டுக்கொண்டே அருகில் இருந்த அறைக்குள் சென்றுள்ளார்.

அவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிலர் உடனடியாக வாளியில் நீரை கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். நீண்ட நேர போரட்டத்துக்கு பின் தீயை முழுமையாக அணைத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அப்பெண்ணை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.