தொடரும் தற்கொலைகள்! தமிழ்நாட்டை சோகத்தில் ஆழ்த்திய மரண சம்பவம்

Report
84Shares

தமிழ்நாடு முழுக்க இளம் தலைமுறைகளை தற்போது பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம் இளம் மாணவிகளின் தொடர் தற்கொலை சம்பவம். சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இப்படி ஒரு கொடுமை.

நடந்த முடிந்த மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இதில் 51%-க்கும் மேற்பட்ட - சுமார் 75,000 தமிழக மாணவ, மாணவியர் இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.

இந்த தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், அதேப்போல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மாணவி வைஷியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏற்கனவே அனிதா என்ற மாணவி முதல் நீட் தேர்விலேயே தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது பலரும் இந்த நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.