கர்நாடகாவின் பெங்களூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கொடூர கொலை சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருபவர் சுரேஷ் பாபு. 12 வயது மதிப்புள்ள மகனை தந்தை வீட்டிற்குள் இருக்கும் மின்விசிறியில் சேலையில் கட்டி தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்ததுள்ளார்.
வேண்டாம், வேண்டாம் என அந்த சிறுவன் கதறி அழுதும் இரக்கமில்லாமல் அந்த தந்தை துடிதுடிக்க கொன்றிருக்கிறார். சிறுவனின் தாயும், சகோதரியும் மன்றாடி கதறி அழுதும் தடுத்த நிறுத்த முடியவில்லை. மகனின் இறப்பை நேரில் பார்த்த சோகத்தில் பக்கத்து அறையில் தாயும் தற்கொலை செய்துள்ளார்.
பெருங்கூச்சல் ஏற்பட அண்டை வீட்டார்கள் போலிஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் விரைந்து வந்த போலிஸ் சுரேஷை கைது செய்தனர். விசாரணையில் சுரேஷ் கடன் பிரச்சனையான் எல்லோரையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. தற்போது சமூக