லாட்டரி சீட்டால் கோடீஸ்வரன் ஆன பரம ஏழை - அந்த பணத்தை வைத்து என்ன செய்ய போகிறார் தெரியுமா

Report
296Shares

தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் செல்லையா. கேரளாவின் மூவாத்துபுழா பகுதியில் 10 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறார். ஹோட்டல் வேலை செய்து வந்த அவர் பின் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்துள்ளார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

இவருக்கு சுமதி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். அண்மையில் கேரள அரசு விஷு பண்டிகைக்காக ரூ 5 கோடி பரிசு என லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது. இதில் வாழக்குளம் பகுதி ஏஜெண்டிடம் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ 5 கோடி பரிசு விழுந்திருப்பதாக தகவல் வெளியானது.

யாரும் முன்வராத நிலையில் செல்லையா தன்னிடம் விற்பனையாகாமல் இருந்த லாட்டரி சீட்டை சரிபார்த்த போது முதல் பரிசுக்கான UB 532395 என்ற எண்ணுக்குரிய சீட்டு இருந்தத கண்டு அதிசயித்து போனாராம்.

அந்த சீட்டை வாழக்குளம் எஸ்.பி,ஐ வங்கியில் டெபாசிட் செய்து விட்டாராம். இது குறித்து அவர் கூறுகையில் தெரு தெருவாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வறுமை இருந்து வந்ததேன்.

அந்த லாட்டரி சீட்டை யாரும் வாங்க முன்வரவில்லை. அந்த சீட்டால் நான் பணக்காரன் ஆகியுள்ளேன். கிடைத்த பணத்தில் ஒரு அழகான வீட்டு கட்டி என் குழந்தைகளை படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆசை என கூறியுள்ளார்.

13047 total views