சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டு சுடுகாட்டில் எரிந்து பிணமாக கிடந்த முதியோர்! மர்ம மரணம் - அதிர்ச்சியாக்கிய கொடூர சம்பவம்

Report
430Shares

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கீழ்க்கொடுங்கலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அப்பாவு மற்றும் அலமேலு தம்பதி. வயதான இந்த தம்பதிக்கு 4 மகன்கள், 3 மகள்கள் இருக்கின்றார்களாம்.

அப்பாவுவுக்கு வயது 95. அலுமேலுவுக்கு வயது 93. தங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம், காலி மனைகள், வீட்டு என அனைத்தையும் பிள்ளைகளுக்கு எழுதிவைத்துள்ளனர். பிள்ளைகளும் அதை வாங்கிக்கொண்டு பெற்றோர்களை வீட்டை விட்டு விரட்டியதாக சொல்லப்படுகிறது.

இதனால் அந்த முதியவர்கள் ஊர் மயானத்தில் காரிய மேடையில் கடந்த மூன்று மாதங்களாக அநாதையாக தங்கியுள்ளனர். அந்த வழியாக செல்வோரிடம் பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் காலையில் மர்மமான முறையில் மேடையிலேயே எரிந்து கருகிய நிலையில் கிடந்துள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

நடந்தது விபத்தா இல்லை கொலையா என விசாரித்து வருகிறார்கள்.

12356 total views