அப்பாவை பறிகொடுத்த நிலையில் சோகத்துடன் அரசு தேர்வு எழுத வந்த பள்ளி மாணவி!

Report
71Shares

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் ஜெய ஸ்ரீ. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது தந்தையான ஐயப்பன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன் தினம் காலமானார்.

இவரது இறுதிச்சடங்கு நிகழ்வுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஜெயஸ்ரீ தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல், பள்ளிக்கு சென்று நேற்று நடைபெற்ற ப்ளஸ் டூ வேதியியல் தேர்வை எழுதினார்.

தான் கணினி துறையில் சாதிக்க வேண்டும் என தனது தந்தை கனவுக்கண்டதாகவும், அந்த கனவை நிறைவேற்றவே தாம் இன்று தேர்வு எழுதியதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

மாணவி தேர்வெழுதி விட்டு வரும் வரை உறவினர்கள் காத்திருந்தனர். ஜெயஸ்ரீ வீடு திரும்பியவுடன் அவரது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.

2987 total views