எங்களை விஷம் வைத்து கொன்றுவிடுங்கள்! என் மகன் எந்த தப்பும் பண்ணல! கலாட்டா செய்த பொள்ளாச்சி குற்றவாளியின் அம்மா

Report
65Shares

பொள்ளாச்சி என்றாலே எல்லோரையும் படபடக்க வைத்துவிட்டது. குளிர்ச்சியான இளநீர் என்பதற்கு பதிலாக பிள்ளையை பெற்றவர்களின் கண்ணீர் என்று தான் சொல்லவேண்டும்.

200 பெண்களை 20 ஆண்கள் 6 ஆண்டுகளாக பாலியல் கொடுமை செய்து பணம் பறித்த செய்தி அம்பலமாகியுள்ளது. இதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் இரு மகன்களின் பேரும் சிக்கியுள்ளது.

இதில் குற்றவாளி திருநாவுக்கரசு என்பவன் இந்த சம்பவத்தில் சில அரசியல் பிரமுகர்களும் உடந்தையாக உள்ளனர் எனக்கூற நாடு முழுக்க ஆளுங்கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கேட்டு அவனது தாயார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வந்தபோது வளாகத்தில் வக்கீல்கள் மற்றும் பொதுமக்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

என் மகன் எந்த தப்பும் செய்யவில்லை. எல்லோரும் சேர்ந்து தான் அவனை கொல்கிறார்கள். எங்களை விஷம் வைத்து கொன்றுவிடுங்கள் என கதறும் வீடியோ சமூகவலைதளத்தில் பரவியுள்ளது.

3427 total views