டான்ஸ் ஆடிய சிறுமிகள் மீது போலிஸ்காரர் செய்த முகம் சுளிப்பான செயல்! குடியரசு தின கூத்து

Report
246Shares

இந்தியா முழுக்க கடந்த ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அரசு சார்பாக டெல்லியில் அலங்கார அணிவகுப்பு மரியாதையுடன் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

அதே போல பள்ளிகள், கல்லூரிகளில் மரியாதை நிமித்தமாக பல நிகழ்ச்சிகள் நடைபெறுவது சகஜமான ஒன்று தான். கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள நந்த் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அப்போது, போலீஸ்காரர் ஒருவர் நடனமாடிய சிறுமிகள் மீது பணத்தாள்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஏதோ தெருக்கூத்து, டப்பங்குத்து என நினைத்து விட்டார் போல.

7626 total views